உமக்கென தலையெழுத்தோ,
யாருக்கும் இலா உணர்ச்சி
உமக்கு ஏன்?
எங்கே உம் உடமைகள்?
எங்கே உம் இருப்பிடம்?
எங்கே உம் உறவுகள்?
எங்கே உம் செல்வங்கள்?
முற்றும் துறந்தவனே மேல்..
உண்ண, உறங்க மடமுண்டு...
உமக்கோ?
யாருக்காக? பலே....
அடுத்திங்கு மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு சிசுவிலும் உமதுணர்ச்சி
குருதியோடு கலந்திட வேண்டும்..
வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்,
வாழ்க தமிழ்த் தலைவன் நீர்
No comments:
Post a Comment