Search This Blog

Saturday, July 17, 2010

சித்தன் வழி: பிச்சை

சித்தன் வழி: பிச்சை

பிச்சை

தமிழன் பிச்சை எடுக்க இங்கு வந்தான்
என்று சொன்னான் ஓர் அரசியல்வாதி,
அவன் சொல்வதற் கேற்பதான்
நம் தமிழனும் நடக்கிறான்....
அவன் வீசும் எழும்பு துண்டுகளுக்கு
உம் கொட்டும் மிருகமானோம்,
இன்றோ கையில் ரொக்கம் 25
இரண்டுவேளை உணவு,
இலவச பேருந்து பயணம்(கோலாலம்பூருக்கு)
புறப்பட்டுவிட்டான் தமிழன் வெட்கமில்லாமல்,
வேண்டாம் என்றுரைத்தேன்...
‘சும்மாதானே காசு கொடுத்து, சாபாடு கொடுத்து,
ப்ரியா KLக்கு வேற போறோம், என்னா
வந்திட போது, போவ வேண்டிதான்’
என்ற பதில்....
அவ்வாளவு அவல நிலைக்கா வந்துவிட்டோம்
நம் மலேசிய தமிழர்கள்...???
என்று மாறும்????

Saturday, July 10, 2010

இந்திய மண்ணைக் கடந்தவன்

என் நாடு என்று இந்நாட்டில்
என்னால் மார் தட்டமுடியலயே....
ஏன்???
அடே!!! அந்நாளில்,
சதி செய்து,
விதி மாற்றினாய்,
எம்மை இந்நாட்டிற்கு
நீ கொண்டு வந்தாய்
வெள்ளையனே,
அகதியாய் வந்தோம்,
சகதியாய் வாழ்கிறோம்
இந்நாட்டில்,
தேட்டமென்று வேலிபோட்டு,
வெளியேராத சிறையில் தள்ளினாய்,
நான்கு தலைமுறை,
நன்கு கடந்தது,
தலையெடுக்க முடியாமல்
தலைவன் தடுக்கிறான்,
வேற்றினம் என,
வெறியோடு ஒதுக்குகிறான்,
கல்வி, அரசியல், பொதுநலம்,
அனைத்திலும் மூன்றாம்
நான்காம் நிலை,
அன்று முதல்
இன்று வரை
ஒதுக்கப் பட்ட இன்மென்று
விதிக்கப் பட்ட
தலை எழுத்தோ?
இன்றோ அரசியல்
நோக்கத்திற்காக ஒரு நாடாம்
ஒரு மக்களாம்,
சிரிப்பு வருகிறது...
நம்பி கெட்டது போதும்,
வெம்பி அழுதது போதும்,
என்று வரும் மார் தட்டிச் சொல்ல
இது எந்நாடு என்று?
உன் கையிலே உள்ளது,
உன் தலை எழுத்து...
மாற்றி அமை...
நாளை உன் தலைமுறை
வாழட்டும் நலனோடு...

Friday, February 26, 2010

தமிழா



உமக்கென தலையெழுத்தோ,
யாருக்கும் இலா உணர்ச்சி
உமக்கு ஏன்?
எங்கே உம் உடமைகள்?
எங்கே உம் இருப்பிடம்?
எங்கே உம் உறவுகள்?
எங்கே உம் செல்வங்கள்?
முற்றும் துறந்தவனே மேல்..
உண்ண, உறங்க மடமுண்டு...
உமக்கோ?
யாருக்காக? பலே....
அடுத்திங்கு மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு சிசுவிலும் உமதுணர்ச்சி
குருதியோடு கலந்திட வேண்டும்..
வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்,
வாழ்க தமிழ்த் தலைவன் நீர்

போராட்டம்


ஓயா.... நமது போராட்டம்

பாரதி



சாதிகள் இல்லையடி பாப்பா, என
நீ கவிப் பாடியும், எவனும்
செவி சாய்க்கவே இல்லை,
ஆயிரம் புரட்சிக்கவி
தோன்றினும் இம் மதி கெட்ட
மனிதனின் புத்தி மாரா!!!!

Saturday, February 20, 2010

சதி

அடே தமிழா!!!!
காலி நிலம் கேட்டான்
அன்றோரு புரட்சித் தமிழன்
இன்றோ உன் கதி???
எல்லாம் ஓரினத்தின் சதி
உன்னினத்திலேயே மோதும் நீ!!!!
விலங்கினமா?? மனிதவினமா???
என்று தீருமோ இவ்விதி!!!